கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சிறுபான்மையினர் மாணவ / மாணவியர்களுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறுபான்மையின மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ / மாணவியர்களிடமிருந்து 2022-23 ஆம் ஆண்டிற்கு பள்ளிப்படிப்பு மற்றும் பேகம் ஹஷ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க காலக்கெடு 15.10.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ / மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments