Breaking News

12.10.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி 12.10.2022 (புதன்கிழமை) அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியே பேச்சுப் போட்டிகள்  காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர்  கல்லூரியில் நடைபெற உள்ளது.  இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 01.00 மணிக்கும் தொடங்கப்பட உள்ளன.


கல்லூரி  மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவுசெய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து  போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு 1. அண்ணலின் அடிச்சுவட்டில் 2. காந்தி கண்ட இந்தியா 3. வேற்றுமையில் ஒற்றுமை 4. பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்பேட்டிகளும், கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு 1. வாழ்விக்க வந்த எம்மான்  2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்  3. சத்திய சோதனை  4. எம்மதமும் நம்மதம்  5. காந்தி அடிகளின் வாழ்க்கையிலே  6. இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளில் பேச்சுப்பேட்டிகளும்  (12.10.2022) அன்று நடத்தப்பட உள்ளன.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட  அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/-  என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. 

மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள்  இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப் பெறவும் உள்ளன. இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments