கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் உதவி
மத்திய அரசு கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் வழி தனிப்பட்ட தொழில்முனைவோருக்கு வட்டி மானியம் வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, தனியார் நிறுவனங்கள், பிரிவு 8 நிறுவனங்கள், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கீழ்க்குறிப்பிட்டுள்ள அமைப்புகளின்படி கால்நடை வளர்ப்புக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.பால்பதப்படுத்துதல் / பால்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு
2. இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு
3. கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள்
4. இனமேம்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் இனப்பெருக்க பண்ணை
5. கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிப்பு வசதிகளை அமைத்தல்
6. விலங்கு கழிவு மூலம் பொருளாதார மேம்பாடு (விவசாய கழிவு மேலாண்மை)
மேற்காண் தொழில்நுட்பங்களின்படி பின்பற்றி வருங்கால முதலீட்டாளர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் தொழில் முனைவோர் 31.03.2023 வரை இத்திட்டத்தின் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளிடமிருந்து திட்டம திப்பீட்டினில் 90% கடன் பெற தகுதியுடையவராவார்.
தகுதியான பயனாளிகளால் சமர்ப்பிக்கப்படும் சாத்தியமான திட்டங்கள் அடிப்படையில் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள், தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் மூலம் பயனாளியின் பங்களிப்புடன் கடன்தொகை வழங்கப்படும்.
அதனடிப்படையில் குறு சிறு நிறுவனங்கள் 10% பயனாளி பங்களிப்புடனும், நடுத்தர நிறுவனங்கள் 15% பயனாளி பங்களிப்புடனும் பிறவகை நிறுவனங்கள் 25% அல்லது அதற்கும் அதிகமான பயனாளி பங்களிப்புடனான கடன்தொகையினைப் பெற்று அதனில் மத்திய அரசால் வழங்கப்படும் 3 சதவீதவட்டி மானியம் பயன்படுத்தி பால், இறைச்சி மற்றும் கோழி உணவு பதப்படுத்தும் அலகுகள், கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள், கால்நடை நோய் தடுப்பு மருந்து / மருந்து தயாரிக்கும் வசதிகள் மற்றும் விலங்கு கழிவுகள் மூலம் தொழில் தொடங்கி பொருளாதாரம் மேம்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை “dahd.nic.in” என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளுமாறும் இதற்கான முன்மொழிவுகளை “ahidf.udyamimitra.in” என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தில் பயனடைய விருப்பும் பயனாளிகள் நேரடியாக இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments