Breaking News

திமுக அரசுக்கு எதிராக பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி, திமுக அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் மாநில செயலாளர் மீனாட்சி தலைமையில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகள் பற்றி ஊடகங்களில் தகவல்கள் கசிந்தன. 

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடிகள்  உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இருந்ததாக தெரிகிறது. 

அண்மையில் இதனை கண்டித்து இந்தி திணிப்பு எதிராக தமிழக முழுவதும்  திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த நிலையில் திமுக அரசு தாய் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக சொல்லி பாஜக சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. 

இந்தனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு ஏற்பாட்டில் தமிழக பாஜக மாநில செயலாளர் மீனாட்சி தலைமையில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழை மட்டும் நீக்கிவிட்டு ஆங்கிலத்தில் முன்னிறுத்துவது தமிழை முற்றிலுமாக ஒழிக்கும் செயலை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக பாஜக மாநில செயலாளர் மீனாட்சி பேசி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

No comments

Thank you for your comments