Breaking News

காஞ்சியிலிருந்து புறப்பட்டது பட்டுநூலில் நெய்யப்பட்டு சிஐடியு மாநில மாநாடு கொடி


 காஞ்சிபுரம், அக். 29-

சிஐடியு மாநில மாநாட்டில் ஏற்றப்படும் சிஐடியு செங்கொடி பட்டுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுநூலில் செங்கொடி நெய்யப்பட்டு  காஞ்சிபுரத் திலிருந்து கொடிபயணம் புறப்பட்டது.


சிஐடியு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர்  தலைமையில் நடைபெற்றது. கொடி பயணத்தை மின்ஊழியர் மத்திய அமைப்பு  பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் எடுத்துக் கொடுக்க பயண குழுவின் தலைவரும், மாநில செயலாளருமான  இ.முத்துக்குமார் பெற்றுக் கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங் தாஸ்,  திருவண்ணமலை செயலாளர் ஆர்.பாரி, மாவட்டத் தலைவர் கே.காங்கேயன்,  காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சினிவாசன், ஜி.வசந்தா, வி.சிவப்பிரகாசம், ஆர்.கார்த்திக், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு, உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்தப் பயணக்குழு காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், குன்றத்தூர், படப்பை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை வழியாக நாகர்கோவிலை சென்றடைகிறது.

No comments

Thank you for your comments