Breaking News

மழைநீர் கால்வாய்களை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகார்கள் ஆய்வு

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் அமைக்கப்பட்ட வரும் மழைநீர் கால்வாய்களை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகார்கள் ஆய்வு செய்தனர்.



சென்னை வானிலை அறிக்கை மையம் வடகிழக்க பருவமழை தூங்க இருப்பதால் கனமழை மற்றும் அதீத கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் பருவமழை துவங்குவதற்கு முன்பு அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

காஞ்சிபுரத்தில் முக்கிய பகுதிகளான ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைகே தண்ணீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் எழிலரசன் ஆய்வு மேற்கொண்டார். உடன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  

மழை துவங்கு உள்ள நிலையில் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் பொது மக்களை அச்சுறுத்தாத வகையிலும் பாதுகாப்பான முறையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்  உத்தரவிட்டார்


No comments

Thank you for your comments