Breaking News

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடைவீதிகளில் நெரிசல்...

தீபாவளி பண்டிகை முன்னிட்டு காஞ்சிபுரம் கடைவீதிகளில் கலை கட்டிய பொது மக்களின் கூட்டம் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்..


நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடும் வேலையில் காஞ்சிபுரத்தில் காந்தி சாலை மூங்கில் மண்டபம் தேரடி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைவீதிகளுக்கு புத்தாடை மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


அதேபோல் சொந்த மாவட்டங்களுக்கு பேருந்துகள் மூலமாகவும் கார்கள் மூலமாகவும் காஞ்சிபுரம் வழியாக செல்வதால் ரங்கசாமி குளம் மூங்கில் மண்டபம் மேட்டு தெரு விளக்குளி பெருமாள் கோவில் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


அதனை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் ஒரு பகுதியை கடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாவதால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்கின்றனர்.

No comments

Thank you for your comments