Breaking News

மறுவீடு செல்லும் அவள் மகப்பேறு மறுப்பது ஏன்?

தாய்மை கூட அடைய தயங்கும்

 தலைமுறையா இது வெட்கக்கேடு....

புணரும் உணர்வுடன்  

புறம் தள்ளும் தலைமுறையா சாபக்கேடு.....



கருமுட்டைக்கு இங்கு கருவூலம் கிடைக்குது

கர்ப்பப்பை கூட வாடகைக்கு கிடைக்குது....


தாய்மை அடையாமல் தாய்ப்பால் சுரக்குமா..

தாய்ப்பால் கொடுப்பவள் வாய்மை ஆகுமா...


புட்டிப்பால் கொடுப்பவள் தாய்க்கு ஈடாகுமா... 

கருவைச் சுமந்தவள் கரவை பசு மறுக்கலாகுமா...

அணைச்சுக்கொள்ள துடிக்குது 

அடவு காக்க மறக்குது.. 

எழவு பிடிச்ச விஞ்ஞானம்

இளைய தலைமுறைய அழிக்குது....


பிள்ளை பெக்கும்

இயந்திரமா பெண் பிறவி... 

பிணைந்திட துடிக்கும் ஈனப்பிறவி


விந்து தானம் கிடைத்தது இங்கே

பொந்து கூட கிடைக்குது இங்கே

சந்து சேதாரம் ஆகாமலே 

சந்ததியும் பிறக்குது இங்கே...


பூப்பெய்து புகுந்த வீடு போனாலும்

பிணமாகும் வரை செல்வி தான் இவளும்... 


கற்பென்பது உடலா உணர்வா.. 

களவு போனாலும் கற்பென்பது கானலா


மறுவீடு செல்லும் அவள் மகப்பேறு 

மறுப்பதுமேன் மலடியிவளோ

மடிநிறை வாளோ


தத்தெடுத்தாலும்

பிறர் பெற்றெடுத்த பிள்ளையே

வழி வழி வந்தாலும் வரும் 

தலைமுறை அனாதை இல்லையே....


சத்தியமா புரியலை சரச சல்லாபம்

சமரசம் சதையாவும்....

சந்ததிக்கு இவையாவும்

தரித்திர சரித்திரமாகும்


வைப்புத் தொகையாகி போனது

வஞ்சி வங்கியானது.. 

வட்டி பிள்ளை பெற்றது....

வைப்புத்தொகை வைத்தவனுக்கு 

வைப்பாட்டி ஆனது...


மகப்பேறு மறுபிறவி மறுக்கும் 

மங்கையர் மாதர் குலத்தின் ஈனப்பிறவி......

வாடகை தாய்மார்களே...உள் வாடகை

விடுவதை விட்டு விடு.... 

பெத்து எடுத்தாலும் பிறப்பு தவறன்றோ.....


சாதிகள் அழிந்துவிடும் வரும் 

சந்ததிக்கு மரபணுக்கள் மாறி போவதால்...


மரபு குலைந்து விடும் 

மாண்பு அழிந்துவிடும்... 

திரிபு நிலையாலே 

திண்ணம் தீர்ந்துவிடும்..


திருந்தட்டும் இந்த சமுதாயம் 

வருந்தட்டும் நிகழ்ந்த தவறுக்கு

நிறுத்தட்டும் இனியாவது

நிலைக்கட்டும் தமிழ் மரபாவது....


🖋 இவண் 

ஆற்காடு குமரன்


No comments

Thank you for your comments