காஞ்சி மாநகராட்சிக்கு இரண்டு பேட்டரி வண்டிகளை இந்தியன் வங்கி சிஎஸ்ஆர் நிதியிலிருந்து வழங்கல்
காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மூன்று லட்சம் மதிப்பில் இரண்டு பேட்டரி வண்டிகளை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் ஆகியோரிடம் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஏ. ராஜாராம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் டி. கார்த்திகேயன், இந்தியன் வங்கி மேலாளர் கே.சந்தோஷ், மாமன்ற உறுப்பினர் நிர்மலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments