இந்து சமய அறநிலையத் துறையினர் சர்வே எண் மாற்றம் செய்த தவறால் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் அருகே திம்மராஜம்பேட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகளவில் வசித்து வரும் இந்து சமய அறநிலையத் துறையினர் சர்வே எண் மாற்றம் செய்த தவறால் நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் பத்திர பதிவையும் நிறுத்தி வைத்துள்ளதால் அவதி ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மையன்பேட்டை கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டுவரி, குழாய்வரி மற்றும் வருவாய் துறையினரால் வழங்கப்படும் பட்டா உள்ளிட்டவைகளை உரிய முறையில் பெற்று பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலும் நூற்றுக்கு மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், திம்மையன்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி திருக்கோயில்களுக்கு சொந்தமான நன்செய் மற்றும் புன்செய் நிலங்களின் பட்டியலை இத்திருக்கோயில்களின் தக்கார் மலைவாசன் மற்றும் சார் பதிவாளர், வாலாஜாபாத் அவர்களுக்கு அனுப்பியுள்ள 13.10.2020 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 15 சர்வே எண்களில் ஆவணப்பதிவு ஏதும் வந்தால் அதனை பதிவு செய்யாமல் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் வரிசை எண் 15-ல் சர்வே எண் -40/5 (தற்போது 40/2) கொண்ட சர்வே எண்ணில் 0.39 ஹ/ஏர் அளவு கொண்ட நிலமும் பதிவு செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கண்ட தக்காரின் கடிதத்தில் வரிசை எண் 15-ல் சர்வே எண் 40/5-ல் என்பதை மட்டும் குறிப்பிடாமல் தற்போது 40/2 என்று தவறாக குறிப்பிட்டுள்ளார். தக்கார் அவர்கள் தவறாக இணைத்து அனுப்பியதாலும், மேற்கண்ட 0.39 ஹெக்டர் அளவு கொண்ட நிலம் எங்கு உள்ளது என சரியான தகவல் (வரைபடம்) அளிக்காததாலும், சார் பதிவாளர், வாலாஜாபாத் அவர்கள் சர்வே எண். 40/2 கொண்ட அனைத்து இடங்களின் பத்திர பதிவையும் நிறுத்தி வைத்துள்ளார்.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் இடத்தை விற்க முடியும் இடத்தின் மீது அடமானம் வைத்து பண பெறுக முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படுவதால் தவித்து வரும் அப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்ற கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா அவர்களிடம் மனு அளித்தனர்.

.jpg)

No comments
Thank you for your comments