அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம் - ஓபிஎஸ் அணி
காஞ்சிபுரம்
அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் 50 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்.
அனைத்திந்திய அண்ணா திமுக கட்சியை பாரதரத்னா முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றோடு 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில், கட்சியின் 51 வது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் முத்தியால்பேட்டை பகுதியில் கட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவும் 51 வது ஆண்டு துவக்க விழாவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவினை ஒட்டி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர், ஜெயலலிதா, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் கட்சியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, உருவம் பதித்த ஐம்பது கிலோ கேக்கினை வெட்டி பொது மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் வழங்கி வெகுவிமரிசையாக கொண்டாடினார்கள்.
விழாவில் அதிமுக அணி முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
.jpg)


No comments
Thank you for your comments