Breaking News

உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவள்ளுர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியம், விஜய நல்லூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் இன்று (10.10.2022) உலக மனநல தினத்தை முன்னிட்டு மெனடோரா அறக்கட்டளை, செயின்ட் தாமஸ் அறக்கட்டளை மற்றும் தி பேனியன் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பாக நடைபெற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டோர் நலத்திட்ட உதவிகள் பெற வழிவகுக்கும் ”மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்களை” 11 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்  தெரிவித்ததாவது :

கடந்த வருடம் இதே நாளில் இந்த வசதிகளை தொடங்கி வைத்தோம். இதில் அரசு பங்களிப்பு மற்றும் தன்னார்வ அமைப்புகளான பேனியன், மெனடோரா அறக்கட்டளைகளின் பங்களிப்பு உள்ளது. முதலில், கார்ப்பரேட் நிறுவனத்தின் பெரிய அளவு ஒத்துழைப்புடன் இந்த வசதிகளை செயல்படுத்தப்பட்டுள்ளது. 


மேலும், செயின்ட் தாமஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம்   பிரம்மாண்டமாக கட்டிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அரசு செய்ய வேண்டும், தொண்டு நிறுவனம் செய்ய வேண்டும், கார்ப்பரேட் நிறுவனம் செய்ய வேண்டும் என்றில்லாமல் ஒவ்வொருவரும் என்னென்ன செய்ய முடியுமோ அதனை அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல காரியத்தை செயவதற்காகத் தான் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 



அரசின்  பங்களிப்பு 10 சதவிகிதம் கொடுத்து, அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்புடன் சேர்ந்து பெரிய அளவில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி, கடந்த ஒரு வருடமாக படுக்கை வசதிகள் 10, 11 என்ற நிலையில் இருந்தது. தற்பொழுது புதிய கட்டமைப்புகளை உருவாக்கி தற்பொழுதுள்ள அளவுகளை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்க உதவி புரிந்த செயின்ட் தாமஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 


இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து முழு ஒத்துழைப்புகளை வழங்கி வரும் பேனியன் தொண்டு நிறுவனத்திற்கும், அரசு அலுவலர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு இந்த அமைப்பில் குறுகிய காலத்திற்கு தங்க வைத்து, பிறகு அவர்களை மனநலம் சார்ந்த மருத்துவத்திற்கு அனுப்பி வைக்கும் மையம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இந்த மையத்தை சிறப்பாக முன்னெடுத்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து வகையான ஒத்துழைப்புகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படும்.



உலக மனநல தினம் இன்று உலகின் பல்வேறு இடங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரை மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையம், வீடு இல்லாமல் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அவர்களுக்கு போதுமான மனநலம் மற்றும் உடல்நலம் குறித்து சிகிச்சை கொடுப்பதற்காகவும், அதன்பிறகு அவர்கள் சாதாரண நிலைமையை அடையும் வரை அவர்கள் தங்குவதற்கான பல்வேறு வசதிகளை கொண்ட ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையம் (ECRC கடந்த வருடம் இங்கு திறந்து வைத்தோம்.

மெனடோரா அறக்கட்டளை, பேனியன் தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம், செயின்ட் தாமஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் என பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து ஒன்றிணைந்த திட்டமாக கொண்டு வந்துள்ளோம். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 50 நபர்களுக்கு உதவி செய்யும் வகையில் தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவுக்கு உதவி செய்து வருகின்றனர். 

இம்மையத்தில் ஏற்கனவே 10 நபர்கள் ஒரே நேரத்தில் தங்கும் வசதிகள் இருந்தது. தற்பொழுது 20 முதல் 25 நபர்கள் வரை தங்குவதற்கான புது வசதிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்றைக்கு மனநலம் பாதிக்கப்பட்டோர்கள் என வந்திருப்பவர்களுக்கு அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, கருத்துக்கள் என்னவென்று கேட்பதற்காகவும் இந்த உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், உலக மனநல தினத்தை முன்னிட்டு மெனடோரா அறக்கட்டளை, செயின்ட் தாமஸ் அறக்கட்டளை மற்றும் தி பேனியன் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பாக மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேநீர், காபி, வடை உள்ளிட்ட உணவு பண்டங்கள் குறைந்த விலையில்  கிடைக்கும் வகையிலும் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ”நிலா கஃபே” என்ற சிற்றுண்டி கடை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கடை இனிவருங்காலங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டோர் நலத்திட்ட உதவிகள் பெற வழிவகுக்கும் ”மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்களை” 11 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், நல்லூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மெனடோரா அறக்கட்டளை, செயின்ட் தாமஸ் அறக்கட்டளை மற்றும் தி பேனியன் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பாக மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேநீர், காபி, வடை உள்ளிட்ட உணவு பண்டங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலும் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ”நிலா கஃபே” என்ற சிற்றுண்டி கடையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, அச்சிற்றுண்டி கடையில் தேநீர் அருந்தினார்.

தொடர்ந்து, நல்லூர் பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் சமூக சேவை செய்யும் பொருட்டு 11 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து அமைத்த ”நெய்தல் குழு” என்ற சமூக சேவைக்கான குழுவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) மரு.இளங்கோவன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜவஹர்லால், மாவட்ட மனநல நிபுணர் மரு.சகுந்தலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.எஸ்.பாபு, ஊ-னுழவ மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் மரு.நவீன் குமார், நுஊசுஊ  மனநல நிபுணர் மரு.சி.அன்பு துரை, செயின்ட் தாமஸ் அறக்கட்டளை பாதர்.ஜான், மெனடோரா அறக்கட்டளை இணை நிறுவனர்கள் திரு.ரத்தீஷ்கனகோடே, திருமதி.ரேவலீனா, தி பேனியன் துணை இயக்குனர்கள் திருமதி.கிருஷ்ணதாஸ், திருமதி.சொப்னா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments