Breaking News

தமிழ் பெயரினை சூட்ட வேண்டுகோள் விடுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ்  சமுதாய வளைகாப்பு  விழா  மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் செவிலிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 



இவ்விழாவில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பேசியதாவது:





காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1900 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு  விழா நடைபெற உள்ளது.  கர்ப்பிணி பெண்களுக்கு உடல் மட்டும் அல்ல உள்ளத்திற்கும் வலிமை அளிக்க கூடிய மகிழ்ச்சி அளிக்க கூடிய  வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.



இன்று 300 கர்ப்பிண பெண்களுக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. பெண்கள் தான் கருவுற்று இருப்பது அறிந்தவுடன் அருகில் உள்ள சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அங்கு வழங்கப்படும் இணை உணவு ஊட்டச்சத்து உணவினை பெற்றுக் கொள்ள வேண்டும்.


நமது மாவட்டத்தில் மட்டும் 940 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரமத்து 506 கர்ப்பிணி பெண்களும், 5 ஆயிரத்து 196 பாலூட்டும் தாய்மார்களும், 6 மாதம் முதல் 6 வயது வரை 41 ஆயிரத்து 694 குழந்தைகள் என அனைவருக்கும்  சத்தான இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது.



மேலும் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள முன்பருவ கல்வி பயிலும் 24 ஆயிரத்து 27 குழந்தைகளுக்கு மதிய உணவு, மற்றும் வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 51 ஆயிரத்து 580 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் ஊட்டும் தாய்மார்கள் பயன் அடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும்  செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு நடப்பாண்டு 2022-2023 –இல் மட்டும் ரூ.118.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் பயன்படுத்தி கொண்டு தங்களையும் தங்களுடைய குழந்தையும் நல்ல விதமாக பேணி பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தருணத்தில் கருவுற்ற தாய்மார்கள்  அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் உங்களுக்கு பிறக்கும்  குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரினை சூட்ட வேண்டும், முன்பு எல்லாம் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரில் பெயர் சூட்டி உள்ளனர். 

அந்த  பெயர்கள் எல்லாம் கடவுள் பெயர்களாகவோ, அழகான தமிழ் பெயர்களாகவோ இருந்து உள்ளது. ஆனால் தற்போது வடமொழி கலந்த பெயரேயா அல்லது புரியாத பெயரேயோ வைக்கின்றனர். ஆகவே இனி பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் படப்பை திரு.ஆர்.மனோகரன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ்,  காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார்,  திருப்பெரும்புதூர் ஒன்றிய குழுத்தலைவர் திரு. எஸ்.டி. கருணாநிதி, வாலாஜா ஒன்றிய குழுத்தலைவர் திரு.தேவேந்திரன், குன்றத்தூர் ஒன்றியகுழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், உத்திரமேரூர் ஒன்றியகுழுத்தலைவர் திருமதி. ஹேமலதா ஞானசேகரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம்)திருமதி.கிருஷ்ணவேணி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.வே.ராஜாத்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments