வேலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளராக பணிபுரிய வாய்ப்பு
வேலூர் மாவட்டத்தில், மூன்று ஆண்டு காலத்திற்குள் காலியாக உள்ள 40 கிராம உதவியாளர் பணியிடங்களை அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்கள் மூலமாக நேரடி நியமனம் முறையில் நிரப்பப்பட உள்ளது.
மேற்படி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழக அரசின் https://www.tn.gov.in இணையதளம், வருவாய் நிருவாகத் துறையின் https://cra.tn.gov.in இணையதளம் மற்றும் வேலூர் மாவட்ட https://vellore.nic.in/ என்ற இணைய தளங்கள் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி கிராம உதவியாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இன்ன பிற விவரங்களை அறிய https://vellore.nic.in/ என்ற இணைய தள முகவரியை அணுகி பயன்பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது.
மேலும், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்ட இணைய தள முகவரி (ஏதாவது ஒன்றில்) வழியாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேற்படி விண்ணப்பங்களை நேரடியாகவோ. தபால் அல்லது பதிவஞ்சல் வழியாகவே அளிக்கப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.
No comments
Thank you for your comments