Breaking News

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் சுப்பிரமணியன் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் சுப்பிரமணியன்  ஆய்வு செய்தார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலம் துவங்குவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் முனைவர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.


முதலாவதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் செயல்படும் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஆய்வு மேற்கொண்டு உணவு உண்ட மாணவர்களிடம் தரம் மற்றும் சுவை மற்றும் வழங்கப்படும் அளவு குறித்து கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியரிடம் உணவு வழங்கப்படும் நேரம் மற்றும் உணவு வகைகளின் ஏதேனும்  மாற்றங்கள்  செய்யலாமா ? என்பது குறித்து கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து பள்ளி வகுப்பு துவங்கியதும் மாணவரிடம் கண்காணிப்பாளர் முனைவர் சுப்ரமணியன் சில கேள்விகளை கேட்க அதற்கு மாணவர்கள் சரியான பதிலை அளித்தனர்.

பின்னர் மாணவரிடம் அவர் கூறுகையில் காலையில் சுறுசுறுப்புடன் உணவருந்தி , சிறப்புடன் கல்வி கற்று உயர்கல்வி பெற வேண்டும் என வாழ்த்தினார்.


இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்



No comments

Thank you for your comments