Breaking News

விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா



காஞ்சிபுரம், அக். 20 -

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 'எவரி டேஷ் ஸ்போட்ஸ்' காஞ்சிபுரம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா   நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தலைமைத் தாங்கினார். 'எவரி டேஷ் ஸ்போர்ஸ்' காஞ்சிபுரம் தலைவர் சைமன், செயலாளர் ரிஷாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


வட்ட விளையாட்டு திடலில் உள்ள 'ஹாக்கி' மைதானத்தை ஒட்டி நாவல், இலுபை, புங்கன், அரச உள்ளிட்ட மரக்கன்றுகளும் நிழல் தரும் பூமரக் கன்றுகளையும் நடவு செய்தனர். 



இந்த மரக்கன்றுகளை நடவு செய்த தோடு விட்டு விடாமல் தினமும் சுழற்ச்சி முறையில்  தண்ணீர் ஊற்றி பராமறிப்போம் என, 'எவரி டேஷ் ஸ்போர்ஸ்' பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் உறுதி மொழி எடுத்திக் கொண்டனர்.

விழாவில் தடகள பயிற்சியாளர் தாஸ்,  கார்த்திகேயன், சுந்தர், இளம் விளையாட்டு வீரர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






No comments

Thank you for your comments