36-வது மாநில இளையோர் தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்...
திருவண்ணாமலையில் நடைபெற்ற 36-வது மாநில இளையோர் தடகளப் போட்டியில் வட்டெறிதலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர் தங்க பதக்கம் வென்றார்.
திருவண்ணாமலையில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் 36-வது மாநில இளையோர் தடகளப் போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற வரும் இந்த தடகளப் போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நான்காயத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன் நடைபெற்ற போட்டியில் வட்டெறிதலில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த மாணவர் ஜா.மகேஸ்வர் 47.30மீட்டர் தூரம் வட்டு எரிந்து முதல் இடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவர் ஜா.மகேஸ்வருக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சான்றிதழும் பதக்கமும் வழங்கினார்.
மேலும் இந்த மாநில அளவிலான போட்டியில் முதலிடத்தை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் மாணவர் ஜா.மகேஸ்வர் அடுத்த மாதம் அசாமில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments
Thank you for your comments