Breaking News

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் உள்ள ஆவடி மாநகராட்சி உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 



இந்தப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதைப்பற்றி பலமுறை ஆவடி மாநகராட்சியில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நேற்று பெய்த ஒரு நாள் சாரல் மழையில் இந்த சாலை முழுவதுமாக தண்ணீரால் நிரம்பப்பட்டு குட்டையாக காட்சியளிக்கிறது.

இனி வரும் மழைக்காலங்களில் இந்த சாலைகளின் நிலைமையை கண்டால் நமக்கே தலை சுற்றுகிறது. 

இந்த வழியாகத்தான் 2000 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆரம்ப சுகாதார த் துறைக்கு செல்லும் முதியோர்கள் மின் துறைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் ரயில்வே நிலையம் பஸ் ஸ்டாப் போன்றவற்றுக்கு இப்பகுதி மக்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகின்றனர்.

தற்பொழுது குண்டும் குழியுமாக உள்ள சாலையை கடப்பதற்குள் நேரம் வீணாகிறது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழந்து எழந்து செல்கின்றனர்.  மாணவ மாணவிகள் உடைகளில் சேற்று தண்ணீருடன் பள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 


குண்டும் குழியுமான சாலையால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க உடனே இப்பகுதியில்  சாலை அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது. 

ஆகவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.  

No comments

Thank you for your comments