சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார்(26) த/பெ.குமார், எண்.20/70, நேதாஜி தெரு, பொய்யாக்குளம், காஞ்சிபுரம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று (06.10.2022) உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments