உத்திரமேரூரில் சமுதாய வளைகாப்பு விழா.. சீர்வரிசை பொருட்களை வழங்கல்
காஞ்சபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்க்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலர்,உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு புடவை,பூ,பழம்,தேங்காய் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் உத்திரமேரூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் வசந்தி குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், சாலவாக்கம் டி.குமார்,வெங்கடேசன், கோகுலகிருஷ்ணன், சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் கர்ப்பிணி பெண்கள்,அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.



No comments
Thank you for your comments