Breaking News

டாக்டர் APJ.அப்துல் கலாம் அவர்களின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

15.10.2022 இன்று காலை 09:00 மணியளவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் APJ.அப்துல் கலாம் அவர்களின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு சாலவாக்கம் ஏசியன் பள்ளி மற்றும் சாலவாக்கம் லயன்ஸ் கிளப் இணைந்து, சாலவாக்கம் ஏசியன் பள்ளியில் உள்ள APJ.அப்துல்கலாம் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


பின்னர் ஏசியன் பள்ளியில் இருந்து சாலவாக்கம் பேருந்து நிலையம் வரையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டது, சாலவாக்கம் கிராம மக்களுக்கு சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் SPVS.சத்யா சக்திவேல் அவர்களால் சாலவாக்கம் பகுதியில் 4000 ம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "

இவ்விழாவில் சாலவாக்கம் லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் SPV.சக்திவேல் ஏசியன் பள்ளியின் தாளாளர் N.தாஜுதீன் அகமத், Dr.A. ஆயிஷா யாஸ்மின் மற்றும் சாலவாக்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் GL.ராஜேஷ் குமார் செயலாளர் A.அப்துல் பொருளாளர் P.செல்வகுமார் உறுப்பினர்கள் V.விஜயகுமார், V.சத்தியன், M.ரங்கநாதன், H.முகமது சாதிக் SR.பால்ராஜ் , Dr S.தாமரைமணாளன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


 


No comments

Thank you for your comments