Breaking News

திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்...

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தையும்- ஒரே பொது நுழைவுத் தேர்வையும்  தி௫ம்பப் பெற ஒன்றிய பா.ஜ.க அரசை வலியுறுத்தி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  க.சுந்தர்  பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து திமுகவினர் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட அவைத்தலைவர் இனியரசு,மாவட்ட துணை செயலாளர்கள் கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருலாளர் சன்பிராண்ட் அறுமுகம்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.சுகுமார், ஆர்.டி.அரசு, நாகன், மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் யுவராஜ்,மணி, பால்ராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஆனந்தன், ராம்பிரசாத், சுரேஷ்குமார், ரஞ்சித்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, பிரேம்சந்த், ராஜேந்திரன், உசேன், எஸ்கேபி சீனிவாசன், சிகாமணி, சசிகுமார், எழிலரசி, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், டி.குமார், பி.சேகர், குமணன், பி.எம்.குமார், பி.எம்.பாபு, சத்தியசாய், பொன்.சிவகுமார், சிற்றரசு, தம்பு, கண்ணன், இராமசந்திரன், கே.குமார், எம்.எஸ்.பாபு, ஏழுமலை, பாண்டியன், சரவணன், பாரிவள்ளல், மோகன்தாஸ், பகுதி செயலாளர்கள் திலகர்,சந்துரு,தசரதன், வெங்கடேசன், மாநகர நிர்வாகிகள் முத்துசெல்வம், ஜெகன்நாதன், நிர்மலா, சுப்புராயன், நகர இளைஞரணி அமைப்பாளர் அர்ஜூன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன குரல்களை எழுப்பினர்.

No comments

Thank you for your comments