Breaking News

பாஜக அண்ணாமலையை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பு

விசிக தலைவர் தொல்.திருமாவளவனை அரசியல் வியாபாரி என்று கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து விருத்தாசலம் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பு...



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் மேற்க்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் மாநிலத் துணைச் செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை அரசியல் வியாபாரி என்று விமர்சனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன முழக்கங்கள் இட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்பு காரில் கொண்டு வரப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர் இவனை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அந்த பொம்மையை அவர்களிடம் இருந்து பறித்து காவல் துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பூக்கடை ரவி, ஊடகம் மைய மாநில துணை செயலாளர் ராஜ்குமார், விருத்தாசலம் நகர பொருளாளர்கள் மேட்டு காலனி முருகன்,  பூந்தோட்டம் தனசேகர், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் வீரமணி, மேட்டு காலனி கர்ணன், மேட்டு காலனி அர்ஜுனன், விஜயகுமார், பூந்தோட்டம் ரமணா, மணிபாரதி, தமிழ்ச்செல்வன், சஞ்சய், பரணி, முகிலன், தன்ராஜ் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதனால் அவ்விடத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பும் ஏற்பட்டது.

No comments

Thank you for your comments