Breaking News

குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழா

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி விழாவின் நிறைவுநாளான 6-ஆம் நாள் விழா கோலாகலம்...

மக்கள் வெள்ளத்தில் நிறைந்த காஞ்சிபுரம் சுப்பரமணி‌சுவாமி திருக்கோவில்

பக்தி பரவச கோஷங்கள் முழங்க திருக்கோவில் பிரகாரத்தினை 108சுற்றுகள் வலம் வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரஹம்மார விழா இரவு நடைபெறவுள்ள நிலையில் திருக்கோவிலில் குவியும் பக்தர்கள்


புகழ்பெற்ற கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி 6-ஆம் நாளான இன்று இவ்விழாவின்  முக்கிய நிகழ்வான சூரஹம்மார‌ விழாவானது நடைபெற்ற உள்ளது.

இந்த நிலையில் இந்த கந்தசஷ்டி விழாவின் 6-ஆம் நாள் கந்தசஷ்டி விழாவினையொட்டி மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளானது நடைபெற்று தொடர்ந்து ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் ஆறுமுகம் கொண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையானது நடைபெற்று முழுவதும் மஞ்சள் நிற மாலைகளினால் காட்சியளித்து நடைபெற்றுவரும் இலட்சார்ச்சனையில் ஏராளமானோர் பங்குகொண்டு வழிபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கந்த சஷ்டி‌ விழா நாட்களில் பக்தர்கள் விரதமிருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு திருக்கோவில் பிரகாரத்தினை 108சுற்றுகள் வலம் வந்து வேண்டி வணங்கி வழிபட்டு செல்வது வழக்கம்.அந்த வகையில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான‌ இன்று வார விடுமுறை நாள் என்பதால்  என்பதால் பெரும்பாலான பள்ளி கல்லூரிகள் விடுமுறை‌யின் காரணமாக பள்ளி,கல்லூரி மாணவர்கள்,பணிபுரிவோர் என சிறியவர்கள்‌,பெரியவர்கள்,முதியோர்கள் என ஏராளமானோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்து திருக்கோவில் பிரகாரத்தினை 108 சுற்றுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்காக காஞ்சிபுரம் மாநகர பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது பல்வேறு கிராம பகுதிகளிலிருந்தும் ஏன் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கூட பல நூறு கணக்கான பக்தர்கள் வந்திருப்பதால் கோவில் வளாகம் மட்டுமின்றி மேற்கு ராஜவீதி பகுதியில் கூட மக்கள் கூட்டமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே காணமுடிகிறது.

மேலும் கந்தசஷ்டி விழா நிறைவு நாளையொட்டி திருக்கோவில் நிர்வாகத்தின் தரப்பில் தண்ணீர் வசதி போன்ற முன்னோற்பாடுகளானது செய்யப்பட்டிருக்கிறது. அதே போல காவல்துறை தரப்பில் திருக்கோவில் அமைந்திருக்ககூடிய மேற்கு ராஜவீதி பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அச்சாலையை இணைக்ககூடிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபட்டு வருகிறது.

மேலும் திருக்கோவினுள் சீருடைகள் அணிந்த மற்றும் மப்டியிலும் போலீசார் எவ்வித குற்றசெயல்களும் நடைபெறா வண்ணம் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரஹம்மார விழா இரவு 10மணியளவில் திருக்கோவில் வெளிப்புறத்தில் நடைபெறவிருக்கிறது.அதே போல் வெள்ளி,தெய்வயானை திருக்கல்யாண பிரம்மோற்ச்சவமானது நாளை மாலை 6மணியளவிலேயும் நடைபெறவிருக்கிறது.

No comments

Thank you for your comments