புகை மற்றும் போதை ஒழிப்பு தெருமுனைக்கூட்டம்
காஞ்சிபுரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிளை சார்பாக ஞாயிறு (30/10/2022) அன்று கிளை தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஒலிமுஹம்மதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.
இதில் சகோ. ஷேக் மொய்தீன் DIS (TNTJ பேச்சாளர், "எங்கே செல்கிறது? இளைய சமுதாயம்" என்ற தலைப்பிலும்
சகோ. தாஹா முஹம்மது MISC "புகை மற்றும் போதையை எதிர்க்கும் இஸ்லாம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
முன்னிலை: அஷ்ரப் அலி மற்றும் சாகுல், காஞ்சி மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் சர்புதீன் காஞ்சி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்.



No comments
Thank you for your comments