ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்.. இறுதிவரை அமர்ந்து அனைவருக்கும் ஆசி வழங்கிய ஆசிரியர் செய்கை ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது..
தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜாஸ்வா. இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற அவில்தர் பிரிவு ராணுவ வீரர் ஆவார். அதன் பின் பணி நிறைவு பெற்று காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆந்திர சன் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் 1951 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், புதுவாயல் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியவதி என்பவர் திருமணம் செய்து கொண்டு காஞ்சியில் வசித்து வந்தார்.
திருமதி பாக்கியவதி டேவிட் 1952 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சியின் கீழ் இயங்கும் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து 40 ஆண்டுகால ஆசிரியர் பணியில் அனைத்து மதப் பிரிவுகளை சார்ந்த குழந்தைகளை தனது குழந்தை போல் கல்வி கற்க செய்து பலரை நல்லொழுக்கத்துடன் உருவாக்கியுள்ளார்.
இவருக்கு ஒரு மகள் இரண்டு மகன் என்று வாழ்ந்து வந்த நிலையில் அவரது கணவர் மரணத்திற்கு பின்பு தனது குழந்தைகளுடன் இன்று வரை வசித்து வருகிறார்.
தற்போது அவருக்கு நூறு வயது ஆரம்பிப்பதையொட்டி அவருக்கு பிறந்தநாள் விழா நடத்த அவரது மகள் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்து இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் காலை பாக்கியவதிடேவிட் அவர்களின் நூறாவது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மேடையில் 100 வயதை ஆரம்பிக்கும் நாளை ஒட்டிய கேக்கினை வெட்டி அனைவருக்கும் அளித்தார்.
அதன்பின் அவரிடம் கல்வி பயின்று தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள், பொறியாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், குடும்பத்தினர் என பல அவருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
விழாவிற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சற்றும் தளராது அமர்ந்து அனைவருக்கும் நல்லாசி வழங்கிய அவரின் உடல் வலிமை மற்றும் செயலை அனைவரும் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.
ஆசிரியை பாக்யதேவிடேவிட் குறித்து பேசி அனைவரும் அன்பாகவும், அதேநேரம் நல்லொழுக்கத்துடன் அனைவரிடம் பழகியவர் என்பதை தனது பேச்சில் கூறிப்பிட்டனர்.
தற்போது நூறு வயது கடந்தவர்களை பார்ப்பது அரிதான நிலையில் இவரின் செயல்களினை கண்டு நாம் அதனை பின்பற்றி நலமுடன் வாழ்வோம்.


No comments
Thank you for your comments