Breaking News

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுக்கடைகளை நடத்தக்கூடாது - தீயணைப்பு அலுவலர் பேச்சு

காஞ்சிபுரம்,அக்.13

பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் பட்டாசுக்கடைகளை நடத்தக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி வியாழக்கிழமை பேசினார்.



காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பட்டாசுக்கடை உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்ஷினி தலைமை வகித்து பேசியது...

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "

அரசு அனுமதி பெற்று பட்டாசுக்கடைகள் நடத்தினாலும் அங்கு எக்காரணத்தை முன்னிட்டும் வேறு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.முக்கியமாக பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் பட்டாசுக்கடைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்காக ஊஞ்சல்-தேன்சிட்டு இதழ்கள் வெளியீடு

எரிவாயு உருளை கிடங்குகள்,பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அருகில் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதியில்லை.பட்டாசுக்கடைகளில் புகைப்பிடிக்கக் கூடாது என்று எழுதப்பட்ட வாசகம் அவசியம் இருக்க வேண்டும்.பட்டாசுக்கடைகளில் பட்டாசுகளை கையாளும் முறைகள் தெரிந்த அடிப்படைப் பயிற்சி பெற்றவர்களையே பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும்.


பட்டாசுக்கடைகளால் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது.பொதுமக்களுக்கு பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும் எனவும் பிரியதர்ஷினி பேசினார்.


இக்கூட்டத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.சம்பத்,செயலாளர் துளசிநாதன்,பொருளாளர் நரேந்திரன் உட்பட பட்டாசுக்கடை உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

No comments

Thank you for your comments