Breaking News

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பல்வேறு மாநிலத்தை சார்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டனர்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரசங்கால் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பல்வேறு மாநிலத்தை சார்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரசங்கால் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை  கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒரிசா, உத்திரபிரதேசம், ஜார்கண்ட, அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் போன்ற 15 மாநிலத்தை சார்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



இக்குழுவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நீர்நிலை மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் உள்ளனர். தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்துராஜ் முதன்மை செயலாளர் திருமதி.பி.அமுதா, இ.ஆ.ப., அவர்கள் பிளாஸ்டிக்கை தூளாக்கி சாலை அமைப்பது,  மழைநீர் சேகரிப்பு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது  மற்றும் பிளாஸ்டிக் தூளாக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகள், மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல், மண்புழ உரம் தயாரித்தல், குடிநீரில் குளோரின் அளவு கண்டுபிடித்தல் போன்றவை குறித்து குழுவிற்கு எடுத்துரைத்தார்.



இவ்வாய்வின்போது ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் செயலாளர் திருமதி.வினி மகாஜன், இ.ஆ.ப., இணை செயலாளர் திரு.சமீர் குமார், இ.ஆ.ப., ஒன்றிய குடிநீர் மற்றும் சுகாதார துறை கூடுதல் செயலாளர் திரு.விகாஸ் ஷீல், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி துறை ஆணையர் டாக்டர்.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  திருமதி.ஸ்ரீதேவி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments

Thank you for your comments