8 வகுப்பு மாணவிக்கு குழந்தை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்... போக்சோ சட்டத்தில் கைது
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரஞ்சித். அதே பகுதியை சேர்ந்த பழ வியாபாரி மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவியை ஆட்டோவில் தினதோறும் பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் அந்த சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று பள்ளியில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதித்த போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மேலும் குழந்தை பிறப்பதற்கான அறிகுறி இருப்பதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிறுமியும் குழந்தையும் நன்றாக இருந்தாலும் ஆட்டோ ஓட்டுனர் மீது புகார் கொடுக்கப்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

No comments
Thank you for your comments