தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அணி சாதனை
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை காஞ்சிபுரம் அணி கைப்பற்றி சாதனை படைத்தனர்.
டெல்லியில் உள்ள MKCS ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடந்த 14ஆம் தேதி துவங்கியது.
தமிழகம்,கேரளா,ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா உள்ளிட்ட 17 மாநிலங்களை சேர்ந்த 800 மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த சிலம்பம் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த அஸ்வின் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பாக பயிற்சியாளர் அஸ்வின் மற்றும் பாபு தலைமையில் சிறுவர் சிறுமியர்கள் மற்றும் ஆண்கள் பெண்கள் உட்பட 45 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தொடு முறை தனித்திறமை என பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் காஞ்சிபுரம் அஸ்வின் மார்ஷல் ஆர்ட்ஸ் அகாடமி சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 33 தங்கம்,4 வெள்ளி,11 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்று சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க இக்குழு வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று பதக்கங்களை வென்று காஞ்சிபுரம் திரும்பிய இக்குழுவினருக்கு காஞ்சிபுரம் ரயில்வே நிலையத்தில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக நடனமாடி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் மோகன்,பயிற்சியாளர்கள் அஸ்வின்,பாபு மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)

.jpg)
No comments
Thank you for your comments