Breaking News

மருத்துவ கிடங்குகளில் 230 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் கையிருப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை மருத்துவக் கிடங்கில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் திடீர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் உள்ள 33 மாவட்ட மருத்துவ கிடங்குகளில் 230 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருந்து பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனை கிடங்குகளில் மருந்து பொருட்கள் உள்ளனவா என்பதனை தணிக்கை செய்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மாவட்ட மருந்து கிடங்கில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் ஐஏஎஸ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு மருந்துகளின் இருப்பு விவரங்கள், கையாளும் விதங்கள் குறித்து அதிகாரிகளிடம்  கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர்,

தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 மாவட்ட மருந்து கிடங்குகளில் ரூ230 .57 கோடி மதிப்பிலான மருந்துகள்  மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும்,

தமிழகத்தில் 322 சாதாரண வகை மருந்துகளும், 301சிறப்பு மருந்துகளும் தேவைப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் 7.63 கோடியும் ,  சென்னை கே.கே நகரில் 15 .21 கோடியும் , அண்ணா நகரில் 33.23 கோடியும் ,  மதுரையில் 10.5 கோடியும் , திருச்சியில் 10.88 கோடியும் ,  திருநெல்வேலியில் 16.77 கோடியும்,  கோயம்புத்தூரில் 8.75 கோடியும் என 230.57 கோடி மதிப்பிலான மருந்துகள் தமிழகத்தில் இருப்பில் உள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மருந்துகள் கையிருப்பில் இருப்பதாகவும்,

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்,அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவைப்படும் அளவுகளைப் பொறுத்து நாள்தோறும் மருந்துகள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இருதயம் அடைப்பு நீக்கும் முக்கிய மருந்தான ஸ்ப்டோகைசினீஸ் 1500 ஊசிகள் தற்பொழுது வந்துள்ள நிலையில் அதை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது என தீபக் ஜேக்கப்  தெரிவித்தார்.

ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கிருஷ்ணகுமாரி, அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் பி சீனிவாசன் மருத்துவ  அலுவலர் மனோகரன் மற்றும் மருத்துவக் கிடங்கு மேலாளர், அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments