Breaking News

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் தீப ஒளி திருநாள் தரிசனம்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகத்துக்கு பின் அனைத்து திருக்கோயில்களும் சிறப்பு மலர் அலங்காரத்துடன் தீப ஒளி  திருநாளை யொட்டி சாமி தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.



சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் திருக்கோயில் காஞ்சிபுர நகர மையப்பகுதியில் அமைத்துள்ள புகழ்பெற்ற கோயில் ஆகும்.

காமாக்ஷி அம்பாள் இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கனைகளையும், மேல் இருகைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கிறாள்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு கோபூஜைக்கு பிறகு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மூலவர் காமாட்சி அம்மன் அரக்கு நிற பட்டாடை உடுத்தி குங்கும நிற மாலை மற்றும் மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ணமலர் அலங்காரத்தில் ரம்மியமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் மூலவர் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூரணி அம்மாள் தங்க கவசம் அணிந்து தீபாவளி பட்சனங்கள் அவருக்கு படையல்  வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமில்லாத பிற மாவட்டங்களில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காஞ்சிபுரம் திருக்கோயில் தரிசிக்கு வந்த ஏராளமான வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்

இதைத் தொடா்ந்து, உற்சவா் காமாட்சி நீல நிற பட்டு உடுத்தி, ரோஜா , மனோரஞ்சித மாலைகள் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து லட்சுமி சரஸ்வதி தேவியுடன் கோயில் நுழைவு வாயிலுக்கு எழுந்தருளினாா்.

அங்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பின்னா், நான்கு ராஜ வீதிகளிலும் ஸ்ரீலட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தீபாவளியை ஒட்டி, திரளான பக்தா்கள், சுவாமி தரிசனம் செய்தனா்.

No comments

Thank you for your comments