Breaking News

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கல்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம், கச்சிப்பட்டு கிராமத்தை சார்ந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர்   நிதியுதவி வழங்கினார்.



திருப்பெரும்புதூர் தனியார் உணவு விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு, விஷவாயு தாக்கி, திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கிராமத்தை சார்ந்த திரு.ரங்கநாதன் (51), திரு.நவீன்குமார் (30), திரு.திருமலை (22) ஆகியோர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர் அவர்கள் நிதியுதவி வழங்கினார்.

விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியான உணவு விடுதியின் கழிவுநீர்  தொட்டியை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.அருண்ஹால்டர்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இதையடுத்து விஷவாயு தாக்கி பலியான கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த திரு.ரங்கநாதன்,  திரு.நவீன்குமார், திரு.திருமலை  ஆகியோர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அவர்கள் இறந்தவர்களின்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரண நிதியாக தலா ரூ.15,00,000/- இலட்சத்திற்கான காசோலை மற்றும் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் பலியான திரு.திருமலையின் சகோதரி மகாலட்சுமிக்கு அரசு வேலைக்கான உத்தரவு கடிதத்தையும் வழங்கினார். 


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தாழ்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அவர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நவீன கருவிகள் இருந்த போதிலும் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாவது நடைபெற்று வருகிறது. 

விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களுக்கு அதிகமான விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இந்த ஆய்வின்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் திரு.சுனில்குமார் பாபு, ஊர்காவல்படை சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் திரு.ஜெயராமன், இ.கா.ப.,  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு.டி.ஆனந்த், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், மாவட்ட வருவாய்துறை அலுவலர் திரு.சிவருத்ரய்யா   மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments