Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சத்தியம் கிராண்ட் ரெசார்ட் என்கிற கேளிக்கை விடுதியில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கச்சிபேடு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்தாக சொல்லப்படுகிறது.  இதில் ரங்கநாதன்(51), நவீன்குமார்(30), திருமலை(18) ஆகியோர் சுத்தம் செய்திட கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நிலையில் மேலே ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகிய மூவரும் அக்கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தனர்



கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் நிறுவன செப்டிக் டேங்க்குகளில் சுத்தம் செய்திட இறங்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.தொழிற்சாலை நிறைந்த இந்த பகுதியில் தொடர்ந்து இத்தகைய சம்பவம் நிகழ்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடதக்கது.



இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி எச்சரிக்கை அறிவித்துள்ளதாவது, 

✦ காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் பழுது பார்க்கவும் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

   கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய விதிகளுக்கு முரணாக தனி நபரை நியமிப்பது சட்டவிரோதமானதும், தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

✦ உத்தரவை மீறி சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வீட்டு உரிமையாளர் அல்லது ஒப்பந்ததாரரே பொறுப்பாவார்கள்.

 கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் குழாயில் இயந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும்.

 மனிதர்கள் மூலம் கழிவுநீர் குழாயில் அடைப்பு அகற்றுவது, சுத்தம் செய்வதை கண்டறிந்தால் கட்டணமில்லா தொலைபேசி 1800-425-2801 (Toll Free Number) எண்ணிற்கு பொதுமக்கள் புகார்அளிக்கலாம்.

✦ மனித கழிவுகளை மனிதனே அகற்றும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் மனித கழிவை மனிதன் அகற்றும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் விதிகள் 2013 (Prohibition of Employment as Manual Scavangers and their Rehabilitation Act, 2013) ன் படியும் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு   காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.



No comments

Thank you for your comments