Breaking News

தடை செய்யப்பட்டுள்ள பட்டாசு இனங்களை கண்டறிந்தால் குற்றவியல் நடவடிக்கை.

தடை செய்யப்பட்டுள்ள பட்டாசு இனங்களை உற்பத்தி செய்வதோ, வாகனங்களில் எடுத்து செல்வதோ மற்றும் விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் கடும் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

மாண்புமிகு உச்ச நீதிமன்ற 29.10.2021 நாளிட்ட உத்தரவின் அடிப்படையில் வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பேரியம் உப்பினை (Barium salt) மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட மற்றும் சரவெடி சார்ந்த பட்டாசுகளின் (Joint Crackers) உடல் நலம் மற்றும் பொது நலத்திற்கு கேடு விளைவிக்கும் தன்மையினை கருத்திற்கொண்டு, அவற்றை உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது மற்றும் விற்பனைக்கென வாகனங்களில் எடுத்து செல்வது (Manufacture, sale and Transportation) அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 


மேற்படி தடை செய்யப்பட்டுள்ள பட்டாசு இனங்களை உற்பத்தி செய்வதோ, வாகனங்களில் எடுத்து செல்வதோ மற்றும் விற்பனை செய்வதோ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் கடும் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள பட்டாசு இனங்களை வாங்குவது மற்றும் உபயோகிப்பதை பொதுநலனை கருதி முற்றிலும் தவிர்த்திடுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments

Thank you for your comments