Breaking News

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டுவதற்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நமக்கு நாமே திட்டத்தில்,  சுமார் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான ஆடிட்டோரியம் கட்டப்படுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா,  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்காக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், விருத்தாச்சலம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன், விருத்தாசலம் நகர மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பூமி பூஜை ஆனது இந்து கலாச்சாரப்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் குருக்கள் வேத மந்திரங்களும் முழுங்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது 

இதில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி, விருத்தாசலம் வட்டாட்சியர் தனபதி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர்கள் அகர்சநத், ரமேஷ், பாலச்சந்திரன், கென்னடி, விஜயகுமார், திமுக நகரக் கழக செயலாளர் தண்டபாணி, மற்றும் நகராட்சி ஆணையாளர் சேகர், நகர மன்ற உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments