Breaking News

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்... 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை

காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (31.10.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். இக்கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த திரு. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை சார்பில் 7  விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான  பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வழங்கினார்கள்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments