தி சென்னை சில்க்ஸ் நிறுவனம்.. பார்க்கிங் இடத்தில் விதிமீறல் போக்குவரத்துக்கு இடையூறு!.. கண்டும் காணாமல் மெத்தன போக்கில் மாநகராட்சி அதிகாரிகள்!
வேலூர், அக்.13-
வேலூர் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பல்பொருள் அங்காடியாக மாற்றப்பட்டதால் பார்க்கிங் வசதியில்லாமல் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தற்போது அடுத்தடுத்து தீபாவளி, பொங்கள் பண்டிகைகள் வருவதால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமே சாலைகளை ஆக்கிரமிக்கும் வணிக நிறுவனங்கள் வாகனங்களே... ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம் முதல் போக்குவரத்து காவல்துறையினர் வரை வணிக நிறுவனங்களின் கைகூலியாக உள்ளனர் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வேலூரில் சென்னை-பெங்களூரு புது பைபாஸ் சாலையில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உள்ளது. தி ஹரிஷ் ஃபுட் ஸோன் என்ற நிறுவனத்தை தி சென்னை சில்க்ஸ் நிறுவனமானது தரைத்தளத்தில் அமைத்துள்ளது. இதற்காக பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை பல்பொருள் அங்காடியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு வரும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் தினந்தோறும் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோன்று, கால்வாய்கள் மீதுள்ள சிலாப்புகள் மீதும் வாகனங்களை நிறுத்தி நடைபாதையை ஆக்கிரமிக்கின்றனர். இதனால் கால்வாய் மீதுள்ள சிலாப்புகள் உடைந்து சேதமடைகின்றன.. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது.
இதுபோன்ற செயல்கள் புது பை£ஸ் சாலை முழுவதுமே அரங்கேறி வருகின்ற. நடைபாதையை கூட விட்டு வைக்கவில்லை... எங்கு பார்த்தாலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன...
வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் உள்ள அலுவலர்கள், தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் அமைந்துள்ள கட்டடத்தின் அடியில் தூர்க்கப்பட்டு, மறைக்கப்பட்டுள்ள நீர்நிலையைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு துணைபோகும் அரசு அலுவலர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருந்த நிலையிலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக பணியாற்றுகின்றனர் அரசு அதிகாரிகள்... என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்...
பள்ளி மாணவர்களுக்காக ஊஞ்சல்-தேன்சிட்டு இதழ்கள் வெளியீடு
கணிசமான தொகையை இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம், சில அதிகாரிகள் வாங்குவதால்தான் அத்துமீறல் அரங்கேறுகிறது.. வேலூர் மாநகரின் வரைபடத்தை அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை பார்த்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகும்.
இதுபோன்ற தடயங்களை மறைத்து பிரமாண்டமான கட்டடங்கள் கட்ட மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழுமம் எப்படி அனுமதி அளித்தது. நகரமைப்பு அலுவலர் எப்படி இந்த கட்டடத்துக்கு அனுமதி கொடுத்தார் என்பதே புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில், ஹைட்ராலிக் கார் நிறுத்துமிடம் அமைத்துள்ளனர். இதில் அடுக்கடுக்காக 30 கார்களை நிறுத்தும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி கொண்ட கார்கள் நிறுத்துமிடம் அமைக்க எதனடிப்படையில் மாநகராட்சி அனுமதி வழங்கியது என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஏனென்றால், அதையொட்டி அடியிலும் மற்றும் முன்பகுதியிலும் கால்வாய் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர். இது பாதுகாப்பானதா? என்ற கேள்வியையும் முன்வைக்கின்றர். மேலும் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் சாலையோரத்தில் உள்ளது என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி நுழைவாயில் அருகில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் கூடுமிடமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் கோரினால் மழுப்பலாக பதில் கூறுகின்றனர். இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் மீது சுமத்திக் கொண்டே போகலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
வருவாய்த் துறையின் நகரமைப்பு வரைபடத்தில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் கட்டடம் அமைந்துள்ள இடத்துக்கு அடியில் நீர் நிலை பகுதி உள்ளது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. சுமார் 16 சென்ட்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என உறுதிபட கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதையும், அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதையும் வசதி படைத்தவர்கள் அவர்களுக்கு சாதகமாக சட்டத்தின் ஓட்டைகளை கையாளுகின்றனர்.. இதற்கு இந்த நிறுவனமும் விதிவிலக்கல்ல...................
தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் அத்து மீறல் செயல்களுக்காக பல லட்சங்களை கையூட்டாக பெற்றுக் கொண்டுள்ளது வேலூர் மாநகராட்சி நிர்வாகம் என்கின்றனர் சிலர்.... இதனால் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது.... கண்டும் காணாதது போன்று அமைதி காத்து கொள்கிறது வேலூர் மாநகராட்சி நிர்வாகம்.
இவ்வழியாகவே மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று வருகின்றனர்... இவர்களும் கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு கட்டடத்தை சுற்றியும், கட்டடத்தின் அடியில் நீர் நிலைகள் இருப்பது உண்மையா? என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகளை மீட்பாரா? அல்லது இவரும் கண்டும் காணாமல் விட்டுவிடுவாரா?.
விதிமீறல் இல்லையென்றும், ஆக்கிரமிப்பு ஏதும் இல்லையென்றும் மாநகராட்சி அதிகாரிகளும், தி சென்னை சில்க்ஸ் நிறுவனமும் தாமாக முன்வந்து தன்னிலை விளக்கம் அளிப்பார்களா... நீண்ட நாட்களாக உள்ள குற்றச்சாட்டுகளை களைவார்களா? இல்லை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்... குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கைகள் எடுப்பார்களா..
வேலூர் மாநராட்சியில் நீர்நிலைகள், கால்வாய் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதற்கு மேயர் மற்றும் ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது மௌனம் காப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
வரும் பண்டிகை காலங்களில் ஏமாறாதீர்கள்வாடிக்கையாளர்களே உஷார்... உஷார்...பிரபலமான ஒரு சில்க்ஸ் நிறுவனத்தின்கவர்ச்சி விளம்பரங்களும்... தரமற்ற துணிகளும்...மற்றும் நகை விற்பனையில் நடக்கும் கண்கட்டு வித்தைகள்...நமது நிருபர் டைரியில் சிறப்பு கட்டுரை...வாடிக்கையாளர்கள் அனுபவம்
No comments
Thank you for your comments