Breaking News

யமஹா தொழிற்சாலையில் தொழிலாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் வடகால் சிப்காட் வளாகத்திலுள்ள யமஹா தொழிற்சாலையில், ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக புதிய தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசாமல் பழைய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையில் உள்ளே காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர்.



யமஹா தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக புதிய தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசாமல் பழைய தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையில் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்


காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே யமஹா மோட்டார் இந்தியா தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் யமஹா இருசக்கர வாகன அனைத்து ரக இருசக்கர வாகனங்கள் தயாரித்து வருகின்றனர்.  இந்த தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்காக ஊஞ்சல்-தேன்சிட்டு இதழ்கள் வெளியீடு


கடந்த மூன்றாண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை மீது ஒப்பந்தம் ஏற்பட சிஐடியூ தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் பேச மறுத்து வருவதாகவும், புதிய தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் முன்பு இருந்து தொழிற்சங்க நிர்வாகி தொழிலாளர் குழுவுடன் ஊதிய உடன்பாடு ஏற்பட நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும்,  யமஹா நிர்வாகம் நடவடிக்கைகளை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கின்றது.

தொழிற்சங்கம் உருவாக்கி முன்பு இருந்த நிர்வாகிகள் தற்போது தொழிற்சாலை நிர்வாகத்துடன் சேர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால் அவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும் புதிய நிர்வாகிகளிடம் தொழிற்சாலை நிர்வாகம் பேசாமல் காலம் வாழ்த்தி வருவதை ஊழியர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் இன்று முதல் 500க்கும் மேற்பட்ட யமஹா தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலையில் உள்ளே தொடர் உள்ளிருப்பு  போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

No comments

Thank you for your comments