Breaking News

ராஜாஜி மார்கெட் திறப்பு... நாளை முதல் செயல்படுகிறது...

 காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக ராஜாஜி மார்கெட்டை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி இன்று திறந்து வைத்தார்

210கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக ராஜாஜி மார்கெட் நாளை முதல் செயல்படுகின்றது

காஞ்சிபுரம் பழைய இரயில்வே சாலையில் நூற்றாண்டுகளை கடந்த பழம்பெரும் காய்கறி சந்தையான ராஜாஜி மார்கெட் இயங்கு வருகிறது.நாள்தோறும் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள்,சில்லரை வியாபாரிகள் இந்த மார்கெட்டில் காய்கறிகளை வாங்கி வருகின்றனர். 

இந்நிலையில் ராஜாஜி மார்கெட்டில்,பழைய சிமெண்ட் கூரைகளிலான கடைகள் என்பதால் மழைக் காலங்களில் மழை நீர் உட் புகுந்து குளம் போல் தேங்கி வியாபாரிகளும்,பொது மக்களும் பெரும் அவதிக்குள்ளாகுவதை போக்கும் விதமாகவும், மக்கள்தொகை அதிகரிப்புக்கு தகுந்தவாறு புதுப்ப்பித்து சிமெண்ட் கட்டிடம் கட்ட வேண்டும்  என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகாலமாக  கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து காஞ்சிபுரம் பெரு நகராட்சியானது  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில்,   இந்த பழம்பெரும் நூற்றாண்டை கடந்த ராஜாஜி மார்கெட்டை புதிதாக கட்டமைக்க 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ,இதற்கான டெண்டரும் விடப்பட்டு,கடந்த சில மாதங்களுக்கு முன்‌ பூமி பூஜை நடைபெற்று அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் நவீன மார்கெட் வளாகத்திற்கான கட்டிட‌ப் பணியானது இன்னும் சில தினங்களில்  துவங்படவுள்ளது. 

இதற்காக இரயில்வே சாலையில் இயங்கி வந்த பழம்பெரும் ராஜாஜி சந்தையை காலி செய்து மாநகராட்சி நிர்வாகத்தால்,  காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் டிப்போ எதிரே 210கடைகளுடன் தற்காலிக  ராஜாஜி மார்கெட்  அமைக்கப்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தற்காலிக ராஜாஜி மார்கெட்டை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இன்று திறக்கப்பட்ட தற்காலிக ராஜாஜி மார்கெட்டி நாளை முதல் காய்கறிகள் விற்பனை துவக்கப்பட்டு நாளை முதல் செயல்படுகின்றது.

மேலும் பழைய இரயில்வே சாலையில் ராஜாஜி மார்கெட்டிற்கான புதிய கட்டிப்பணிகள் முடியும் வரை இங்கேயே தற்காலிகமாக ராஜாஜி மார்கெட் செயல்படும் என காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மண்டலக் குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள்,ராஜாஜி மார்கெட் வியாபாரிகள் என பலர் கலந்துக் கொண்டனர்.


No comments

Thank you for your comments