Breaking News

செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை.. தந்தையும் தூக்கு போட்டு தற்கொலை

குன்றத்தூர் அருகே செல்போனில் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை..

மகன் இறந்த தூக்கம் தாளாமல் அதே கயிற்றில் தந்தையும் தூக்கு போட்டு தற்கொலை..


குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுந்தர்(40), கார்பெண்டர் வேலை செய்து வந்தார் இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். 

நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். மேலும் நவீன் குமார் அதிகமாக செல்போனில் விளையாடியதை அவரது தந்தை சுந்தர் கண்டித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் மணமுடைந்த நவீன் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை அறையில் சென்று பார்த்த போது நவீன் குமார் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்கள் வந்து நவீன் குமார் உடலை மீட்டு அழுது கொண்டிருந்தனர்.

இந் நிலையில் தன்னால் தனது மகன் இறந்து விட்டானே என்ற சோகத்தில் சுந்தர் கத்தியால் தனது கையை அறுத்து கொண்டு அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை, மகன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 

மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தையும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments