சரஸ்வதி சிலையில் முன்பு மழலைகளை அமர வைத்து 'அ' மற்றும் 'ஓம்' எழுத்து பயிற்சி
விஜயதசமி ஒட்டி தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வமுடன் குழந்தைகளை சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் மழலையகளை சரஸ்வதி சிலை முன்பு அமரவைத்து அரிசி தட்டில் 'அ' என எழுதி மழலைகள் எழுதத் தொடங்கி வைத்தனர்
ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் தினமான விஜயதசமி நாளன்று பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிகளுக்கு அனுப்புவது நம்பிக்கை. அன்றைய தினத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றால் எதிர்காலத்தில் மாணவர் கல்வியில் சிறந்தவராக விளங்குவார் என அனைவரது எண்ணம்.
அந்த வகையில் விஜயதசமி அன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதல் முதல் பள்ளியில் சேர்த்து முதல் நாள் வருகை பதிவு இடம் செய்து வருகின்றன.
காஞ்சிபுரம் தனியார் பள்ளிகளில் ஆர்வமுடன் காலையிலிருந்து லேசான சாரல் மழை பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனியார் பள்ளியில் மழலைகளை சேர்க்கை முடிந்தவுடன் பள்ளியில் இருக்கும் சரஸ்வதி சிலையில் முன்பு மழலைகளை அமர வைத்து பள்ளி ஆசிரியர் அரிசி தட்டில் உயிர் எழுத்துக்களை முதன்மை எழுத்துக்களான 'அ' மற்றும் 'ஓம்' என எழுத வைத்து எழுத்து பயிற்சி தொடங்கினர்.
விஜயதசமி அன்று பள்ளி சேர்க்கையில் நடைபெற்றால் கல்வியில் சிறந்து விளங்குவதாக எண்ணி பெற்றோர்கள் ஆவலுடன் தங்கள் குழந்தைகளை என்று சேர்க்கை நடைபெற்று வருகிறது.
No comments
Thank you for your comments