மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ரூ.8 லட்ச மதிப்புள்ள தாலி சரடு வழிப்பறி...
காஞ்சிபுரம் :
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்து சென்ற பெண்மணியிடம் சுமார் ரூ.8 லட்ச மதிப்புள்ள தங்க சரடு வழிப்பறி நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவத்தால் நகரில் பெரும் அச்சம் நிலவுகிறது.
பூ வியாபாரம் முடித்துவிட்டு நேற்று மாலை 9 மணி அளவில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை வழிமறித்த ஒரு வாலிபர் அக்கா ஒரு நிமிடம் நில்லுங்கள் எனக் கூறியதைக் கேட்டு பத்மாவதியும் நின்று விட்டார். அந்த ஒரு வினாடியில் இவர் கழுத்தில் அணிந்து இருந்த சுமார் எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள 16 சவரன் தங்கத் தாலி சரடை அந்த மர்ம வாலிப கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு அப்பாச்சி பைக்கில் ஏறி உடனே அங்கிருந்து தப்பினார்.
பத்மாவதிக்கு அந்த சில வினாடிகள் அங்கு என்ன நடந்தது என்ற உணர்வே இல்லாமல் பிரமிப்பிடித்தது போல இருந்துள்ளார் .அந்த மர்ம வாலிபர் கழுத்திலிருந்து நகையை பறிக்கும் போதும் இவர் சத்தம் போடாமல், எங்கே தன்னை குத்தி கொலை செய்து விடுவானோ என்ற பயத்திலேயே பித்து பிடித்தது போல இருந்ததாக கூறப்படுகிறது
ராஜாஜி மார்க்கெட்டில் இருந்து இவருடைய வீட்டுக்கு வரும் வழி எங்கும் எப்போதுமே மக்கள் நடமாட்டம் காணப்படும். அப்படிப்பட்ட நிலையிலும் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மிகவும் துணிச்சலாக பத்மாவதியை நிறுத்தி கழுத்தில் இருந்த தங்க தாலி சரடை பறித்துக் கொண்டு போனது அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அதில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் அப்பாச்சி வண்டியில் வந்து போவது தெரிவதை வைத்து அந்த மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வழிப்பறி சம்பவம் வெளியே கசிந்து விடக்கூடாது என காவல்துறையினர் இதை மூடி மறைக்க முயற்சித்ததாக தெரிய வருகிறது. அதையும் மீறி நமது செய்தியாளர் கள ஆய்வு செய்தது இந்த வழிப்பறி சம்பவத்தை வெளிஉலத்திற்கு கொண்டு வந்தார்.
இது போன்ற பல வழிப்பறி சம்பவங்கள் நகர் பகுதியில் அவ்வப்போது நடக்கிறது. இதை வெளியே கூறக்கூடாது என நகையை பறிகொடுத்தவர்களுக்கு காவல்துறையினர் மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்ல தயங்குகிறார்கள்.
ஏற்கனவே பல இடங்களில் திருட்டு / கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நிலையில் நகரின் மையப் பகுதியிலேயே வழிப்பறி செய்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


No comments
Thank you for your comments