Breaking News

ரங்கசாமி குளம் மற்றும் யதோத்காரி திருக்குளத்தினை மாநகராட்சி குழுவினர் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமி குளம் மற்றும்  யதோத்காரி திருக்குளத்தினை காஞ்சிபுரம் மாநகராட்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.


காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 18 திருக்கோயில் குளங்கள் அமைந்துள்ளது.

இத்திருக்கோவில் குளங்களில் மழை பெய்யும் காலங்களில் குளங்களை சுற்றி உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் வழிந்து ஓடும் மழை நீரை நேரடியாக குளத்திற்கு செல்லும் வகையில் கட்டமைப்பு பல ஆண்டுகளுக்குப் முன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாளடைவில் இது போன்ற கட்டமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளங்களுக்கு நீர் செல்லும் பாதைகள் முற்றிலும் அழிந்து மறைந்து போய் குளங்கள் வறண்டு காணப்பட்டன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் திருக்குளங்களை புனரமைத்து அதன் நீர் வரும் வழிதடங்களை புனரமைத்து சுற்றி உள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக்க முடிவு செய்யப்பட்டு பணிகளை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் துவக்கி வைத்தார்.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமி குளத்தை மாநகராட்சி பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு குளத்திற்கு வரும் நீர் வழி பாதையை  முழுவதையும் சுத்தம் செய்து நீர் செலுத்தி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.

இதேபோல் யதோத்காரி திருக்குளத்தினையும் மாநகராட்சி ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு பணிகளும், அதன் பின் மாநகராட்சி செயல்பாட்டிலும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து விரைவில் திருக்குளங்கள் நிரம்பும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

No comments

Thank you for your comments