Breaking News

ஸ்டாலின் முதல்வரான பிறகுதான் மழையோ மழை பெய்கிறது - அமைச்சர் துரைமுருகன்

சென்னை: 

முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் மழையோ மழை பெய்து வெள்ளம் ஓடி வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், "கடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக கரைகள் உடைப்பு ஏற்பட்டன. இந்த ஆற்றின் கரைகளை சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "கொஞ்சம் நாள் மழையே பெய்யவில்லை. வெள்ளம் வரவில்லை. கரை உடையவில்லை. ஆனால் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மழையோ மழை என பெய்து வெள்ளம் ஓடி வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் இதெல்லாம் நடைபெறுவதால் எவை முக்கியமானதோ அதை உடனடியாக செய்து தருவோம்" என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

No comments

Thank you for your comments