Breaking News

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சோளக்காட்டு பொம்மை - சி.வி சண்முகம் கடும் விமர்சனம்

தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது குடும்ப ஆட்சி என்றும், திமுக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சோளக்காட்டு பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் விருதாச்சலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடுமையாக குற்றச்சாட்டினார்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது பொன்விழா தொடக்க விழாவை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக, விருத்தாச்சலம் வானொலி திடலில், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

சுமார் 3,000-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித் தேவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 


மாநிலங்களவை உறுப்பினர் சி வி ஷண்முகம் பேசியது, 

அதிமுக இயக்கம் தொடங்கப்பட்டதற்கு முக்கிய  காரணம், கருணாநிதி என்ற தீய சக்தியை அழிப்பதற்காக,     தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என கூறினார். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில், 32 ஆண்டுகள் ஆட்சி கட்டில் அமர்ந்துள்ள மாபெரும் இயக்கமாக உள்ளது என கூறினார். 

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக இயக்கத்தை பிளவு படுத்தி விடலாம் என கனவு காண்பதாகவும், அதிமுக இயக்கத்தால் உருவாக்கப்பட்ட கருங்காலி ஓபிஎஸ் உடன் திமுக இணைந்து, அழித்துவிடலாம் என நினைக்க வேண்டாம் என்றும், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என்று எச்சரிக்கை விடுத்தார். 

கடந்த அதிமுக ஆட்சியில், வைகோ தலைமையில் நடைபெற்ற பேரணியில், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், புரட்சித்தலைவி செயல்பட்டதாகவும், தற்போது ஆட்சிக் கட்டிலில் உள்ள சின்ன புத்தி ஸ்டாலினைப் போல், புரட்சித்தலைவி அம்மா நினைத்து இருந்தால், திமுக என்றைக்கு அழிந்திருக்கும் என்றும், திமுகவிற்கு பிச்சை போட்டது புரட்சித்தலைவி அம்மா என குற்றம் சாட்டினார். 

முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த, அதிமுகவின் கோவிலாக இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தை, திமுகவுடன் இணைந்து, காவல்துறை துணையுடன் உள்ளே புகுந்து, சூறையாடி சென்ற  ஓபிஎஸ் ஒரு கருங்காலி, துரோகி என்றும், திமுகவிடம் இணைந்து அதிமுகவை முடக்கி விடலாம் என நினைப்பது முடியவே முடியாது என உறுதியளித்தார்.

திமுக ஆட்சி முடிவதற்கு, ஐந்து வருடம் காத்திருக்க தேவையில்லை என்றும்,  திமுக ஆட்சி எப்போது போகும் என திமுகவினரே புலம்புவதாக புகார் தெரிவித்தார். 

திமுக ஆட்சி வெளங்காது, உருப்படாது, ஒரே குடும்பம் கொள்ளையடிக்க பார்க்கிறது என திமுகவினர் சொல்வதாகவும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி என்று கூறுவதாக தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் காலையில் எழுந்திருப்பதும், பவுடர் அடிப்பதும், டோப்பாவுக்கு மை அடிப்பதிலும் பிசியாக உள்ளார் என்றும், நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், நிர்வாக திறனற்ற தத்தி முதலமைச்சரை யாரும் பார்த்ததில்லை எனக்கு குற்றம் சாட்டினார். 

திமுக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை என்றும், அவர் ஒரு சோளக்காட்டு பொம்மை முதல்வர் என விமர்சனம் செய்தார். 



எழுதிக் கொடுத்தாலும் சரியாக படிக்கத் தெரியாத திமுக முதலமைச்சர் ஒரு இயந்திரம் என்றும்,  தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவது அவரது குடும்பம் என்றும்,  ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது மகன் உதயநிதி,  மருமகன் சபரீசன் ஆகியோர்தான் ஆட்சி நடத்துவதாகவும், தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என்று குற்றம் சாட்டினார். 

மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து, அப்ப பிரச்சனைகளை திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்க்கவில்லை என்றும், தேர்தலின் போது கொடுத்த 525 வாக்குறுதிகள் எதுவும் செய்யவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையே இல்லை என்றும்,   கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி  செய்த திட்டங்கள் கொண்டுவரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினாலே போதும் என கூறினார்.  

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுத்தது, ஆனால்  திமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினர்.

மேலும் அனைத்து ஊடகங்களும் திமுகவினரை மறந்து விட்டதாகவும்,  அதிமுக-வை பற்றி தான் முழுமையாக பேசுகிறது என கூறினார்.

விடியா ஆட்சியில் கட்டுமான பொருட்கள் வின்னைமுடட்டும் அளவில் உயர்ந்துள்ளது என்றும், மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது என்றும், கிராமப்புறங்களில் வீடுகளுக்கான சொத்து வரியும் உயர்த்தப்பட்டது என தெரிவித்தார். மேலும் மக்களுக்கு அடுத்த பரிசாக பஸ் கட்டண உயர்த்தப்  போவதாக எச்சரிக்கை விடுத்தார். 

தற்போது பள்ளிக்கல்வித்துறை பாலியல் துறையாக மாறி வருவதாகவும், திமுகவினர் கூட்டுக் கொள்ளை அடிப்பது போல், மாணவிகளை கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டதாக வேதனை தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாகவும், உயிர் காக்கும் மருந்துகள் கூட அரசு மருத்துவமனையில் இல்லை என்றும், ஏழை எளிய மக்களை காக்கும் மருந்தை கொள்முதல் செய்து வாங்குவதை விட சுகாதாரத் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை உள்ளது என்றும், துப்பில்லாத அரசு என குற்றம் சாட்டினார். 

தற்போது பதவி பயத்தில் திமுக முதலமைச்சர் தூக்கமின்றி தவிப்பதாகவும், அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்க இந்தி திணிப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். 

ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் பள்ளியில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் என்றும் அப்பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவதாக தெரிவித்தார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே சமயத்தில் வரும் என்றும், மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சி அமையும் என சூளுரைத்தார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாரன், சிவசுப்பிரமணியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகமணி, தலைமைக் கழக பேச்சாளர்கள் தில்லை கோபி,   தர்மராஜன், நகர செயலாளர் சந்திரகுமார் மற்றும் நகர ஒன்றிய பேரூரர் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments