சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மடக்கிப் பிடித்து பறிமுதல்
போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்த காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள். மடக்கிப் பிடித்த கால்நடைகளை மாநகராட்சி பவுண்டரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலை பகுதிகளிலும், தெருக்களிலும், ஏராளமான கால்நடைகள் போக்குவரத்திற்கும்,பொது மக்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் சுற்றி திரிந்து வருகிறது.
முக்கிய சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதாலும், சாலைகளில் படுத்துக் கொள்வதாலும் வாகன ஓட்டிகளில் விபத்தில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கையின்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி காஞ்சிபுரம் ரங்கசாமி குளம், விளக்ககொளி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்து மாநகராட்சி பவுண்டரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றி திரிந்த கால்நடைகளை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்ததை அறிந்து கால்நடை உரிமையாளர்கள் விரைந்து வந்து மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



No comments
Thank you for your comments