2வது முறையாக திமுகவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ... எம்எல்ஏ சிவிஎம்பி.எழிலரசன் நேரில் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி வி எம் பி எழிலரசன் BE.,BL.,MLA நேரில் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது, பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோர் வழியில், உலகமே உற்று நோக்கும் வகையில் #திராவிட_மாடல் ஆட்சியை, ஏழை, எளியோர் போற்றும் வகையில் வழங்கி கொண்டிருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15வது கழக பொதுத் தேர்தலில், கழகத் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து, மகிழ்ந்தேன்...
தமிழ், தமிழினம், தமிழ்நாடு காக்கும் கழகத் தலைவர் தளபதியாரின் தலைமையில், கொள்கை உணர்வோடு பயணிக்க உறுதி ஏற்போம்!. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோர் வழியில், உலகமே உற்று நோக்கும் வகையில் #திராவிட_மாடல் ஆட்சியை, ஏழை, எளியோர் போற்றும் வகையில் வழங்கி கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், 15வது கழக பொதுத் தேர்தலில்,
— சி.வி.எம்.பி.எழிலரசன்/C.V.M.P.Ezhilarasan (@EzhilarasanCvmp) October 12, 2022
1/2 pic.twitter.com/5gD4FPe8FY
No comments
Thank you for your comments