Breaking News

ஏகனாபுரம் மக்களை தனித்தீவு மக்கள் போல் காவல்துறையினர் சித்தரித்து கொடுமை படுத்துவது கண்டனத்துக்குரியது

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களை சந்திக்க சென்ற  ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை  ஏகனாபுரம் மக்களை தனித்தீவு மக்கள் போல் காவல்துறையினர் சித்தரித்து கொடுமை படுத்துவது கண்டனத்துக்குரியது என பேட்டி அளித்தார் 



காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக இன்று தமிழக அமைச்சர்களை ஏகனாபுரம் மற்றும் 12 கிராம மக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். 



அமைச்சர்கள் உங்கள் கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நல்ல முடிவு கூறுவதாக கூறிய பின்பு வரும் 17ஆம் தேதி சட்ட மன்றத்தை நோக்கி நடைபயண போராட்டத்தை தற்காலிகமாக கைவிடபட்டதாக முடிவெடுக்கப்பட்டது.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை சென்று வந்த கிராம மக்களை மக்களோட மக்களாக தரையில் அமர்ந்து சந்தித்து பேச ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ஏகனாபுரம் வந்திருந்து அவர்களுடன் கலந்துரையாடினார். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 

ஏகானாபுரம் மக்களுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தில் தனி தீர்மானம் இயற்றி விவாதிக்கப்படும்.  ஏகனாபுரம் மக்களை தனித்தீவு மக்களைப் போல் சித்தரித்து காவல்துறையினர் கொடுமையாக நடந்து கொள்ளும் விதம் கண்டனத்துக்குரியது 

எனது தொகுதிக்குள் செல்ல என்னையே காவல்துறையினர் அனுமதி வாங்க வேண்டும் என்று கேட்கின்றனர் எனது தொகுதியில் உள்ள பகுதிக்கு நான் செல்ல யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை



ஆகவே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை ஏகனாபுரம் பகுதிகளில் அமைத்துள்ள தடுப்புகளையும் போலிஸ் பூத்தையும் உடனே அகற்ற வேண்டும்

காவல்துறையினர் தடுப்பு வைத்து ஏகனாபுரம் மக்களை சித்தரவதை செய்கின்றனர் இது தமிழக அரசை அவமதிக்கும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments