ஒழுங்கற்ற சாலையால் இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
- காஞ்சிபுரம் ஒலிமுகமதுப்பேட்டை அருகே விநாயகபுரம் பகுதியில் ஒழுங்கற்ற சாலையால் இரு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்.
- பள்ளி சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்.
- படுகாயங்களுடன் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதி.
- பாலுச்செட்டி சத்திரம் போலீசார் விசாரணை.
காஞ்சிபுரம் அருகே காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலையில் ஒலிமுகமது பேட்டை விநாயகபுரம் பகுதியில், காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி நோக்கி சென்ற பயணிகள் ஆட்டோ மீது விநாயகபுரம் கூட்டுச்சாலையில் வந்த மற்றுமொரு பயணிகள் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர்கள் பிரேம்குமார் வயது 23,குரு வயது 19,மற்றும் பயணிகளாக வந்த அபூர்வம்மாள் வயது 65, பள்ளி சிறுவன் என 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர்.
ஒழுங்கற்ற சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் நான்கு பேர் நடுக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


.jpg)

No comments
Thank you for your comments